Sunday, May 29, 2016
Saturday, May 28, 2016
Friday, May 20, 2016
அப்பால் ஒரு நிலம்
"போர்" எமக்கு வாழ்வின் பெரு வலியாக இருப்பினும் அது எமக்கு பல பாடாங்களைக் கற்றுத் தந்துள்ளது. பங்களா வீடும், தோட்டம் துறவுகளோடும் வாழ்ந்த மக்கள் விலங்குகள் வாழும் காடுகளில் தார்ப்பாய்க் கொட்டில்களுக்குள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டனர். இது எம் மக்களை பல வகையிலும் இந்த நூற்றாண்டின் மகத்தான மனித வாழ்வை கட்டமைக்கச் செய்துள்ளது. பல்வேறுபட்ட தேசங்களின் போரிலிருந்து ஈழத்தின் போரை வெறுப்பது தவறு. இது ஒரு இனத்தின், ஒரு மக்கட்கூட்டத்தின், நாகரிகத்தை, கலை, கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கத் துடிக்கின்ற ஒரு மனித இனத்தின் வாழ்வைக் காப்பாற்ற, இருப்பைத் தக்கவைக்க முனையும் ஒரு மரபுவழி இனக்குழுவின் இறுதி ஆயுதம்.
"ஈழம்" தமிழ் இனம் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த, வருகின்ற தாய் நிலம். ஆணிவேர் ஆழப்பாய்ந்த அந்நிலத்திலிருந்து அறுத்தெறிய முனைவது எவ்வளவு கயமை நிறைந்தது? கொடியவர்கள் அதைத்தான் செய்தார்கள். "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடத்தைப் பிடிப்பார்கள்" எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு இன்று வந்தேறிகள் வாழ்கிறார்கள். இருப்பினும் இலக்கியத்தினூடே அது தன்னை மீளக் கட்டமைத்து வாருகிறது. அழித்தொழிக்கப்பட்ட இனம் இலக்கியத்தினூடே தன்னை மீளக் கட்டமைத்துக் கொள்வது அவசியத் தேவையும்கூட.
"தமிழ் இலக்கியம்" இன்று மூன்று வகையாக தன்னை கட்டமைத்துள்ளது. முதலாவது தமிழகத்திலிருந்து எழும் இலக்கியம். இரண்டாவது ஈழத்திலிருந்து எழும் இலக்கியம். மூன்றாவது புலம்பெயர் தேசங்களிலிருந்து எழுகின்ற மூன்றாம் இலக்கியம். மூன்றாம் இலக்கியம் பெரும்பாலும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களாலேயே இயற்றப்படுகின்றது. இவ்வகை இலக்கியம் புனைவுகளுக்கு அப்பாற்பட்ட எதார்த்தமான, வாழ்வியலின் உண்மைகளை திரிபற்று உரைப்பவை. இத்தகைய மூன்றாம் இலக்கியப் பரப்பிலிருந்து வெளிவந்திருக்கிற குணா கவியழகன் அவர்களது "அப்பால் ஒரு நிலம்" நாவல் புறவாழ்வின் எதார்த்தத்தை செப்புகின்ற அற்புதமான போரின் வாழ்விலக்கியம்.
"அப்பால் ஒரு நிலம்" உலக வரைபடத்தில் தமிழகத்தின் கீழ் ஒரு கண்ணீர்த் துளிபோன்ற நில அமைப்பைக் கொண்டது. ஈழத்தின் வரைபட அமைப்பைப் போலவே மக்கள் வாழ்வும் கண்ணீர் சூழ அமையும் என்பதை யூகித்திருக்க முடியாதுதான். ஆனால் விதி அப்படித்தான் அமைத்து வைத்தது. வடக்குக், கிழக்குப் பிரதேசங்களின் வளங்களை சிதைத்தழித்த கொடியவர்களையும், அவற்றையெல்லாம் முறியடித்து வளப்படுத்தி ஆட்சி புரிந்த புலிகள் அமைப்பையும் நாம் மறந்துவிட முடியாது. மறுத்துவிடவும் முடியாது. 1994 இறுதி தொடக்கம் 1996 மத்திய கால இடைவெளியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து பின்பு 1996 செப்டம்பரில் தமிழகத்திற்குள் புலம்பெயர்ந்த இடைவெளிக்குள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். இக்கால வேதனைகளை மீள வாசிக்கையில்தான் எத்தனை விடயங்களை அசைபோட வைக்கிறது. இந்தக் கால இடைவெளியில் இயக்கம் சிறுசிறு வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் மொத்தத்தில் யாழ்குடா நாட்டை இராணுவத்திடம் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்தது. போரின் பின்னடைவில் தளபதி தண்டிக்கப்படுவதும், மீளக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீட்டுருவாக்கம் செய்வதும். அஅதற்காக எடுக்கப்படுகின்ற சிரத்தைகளும். அதில் ஏற்படும் உயிர்பலிகளும், அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலை எனும் இலக்கை நோக்கி பயணப்படுவதும் மணியின் பாஷையில் சொல்லப் போனால் ஊசியடிப்பது போல் உள்ளது. எவ்வித போலிகளுமற்று. புலிகளின் அமைப்பில் மிகவும் திறமையும், சாகசமும் மிகுந்த, எதிரிக் குகைக்குள் நுழைந்து உளவறியும் வேவுப் புலிகளின் வாழ்வை இவ்வளவு நுட்பமாக எவராலும் சொல்லிவிட முடியாது.
அடுத்து என்ன நடக்கும், நாளை உயிரோடு இருப்போமா? எதுவும் நிச்சயமாய்த் தெரியாமல் கூடியிருக்கும் சக போராளிகளோடு பன்பலடிப்பதும், பகிர்ந்துண்பதும் என இவ்வளவு எளிமையானவர்களை, இளகிய மனம் படைத்தவர்களை சிங்களமும், உலக வல்லாதிக்கமும் இணைந்து எப்படி அழித்தொழித்தது இவர்களைக் கொடியவர்களென. மாபெரும் தவறை தமிழினத்திற்கு உலக வல்லாதிக்கம் இழைத்திருப்பதை மறந்துவிட முடியாது.
றோமியோ கதாபாத்திரம் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுகூர்கிறது.
துரோகத்தின் விளைவால் முள்ளிவாய்க்காலில் எமது போர் முடிக்கப்பட்டாலும் அது தந்த இரணங்களை மறக்கவியலாது. அப்பால் ஒரு நிலம் எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆவணம். போலிகளைக் கொண்டு உண்மைகளை மூடிமறைக்க எத்தனிப்போருக்கு மத்தியில் கொரில்லா யுத்தமுறையிலிருந்து மரபுவழி யுத்த முறைக்கு கட்டமைத்து சிறப்புற நிர்வாகம் செய்த உத்தமர்களை இன்னும் ஆவணமாக்க வேண்டும். ஈழ இலக்கிய வெளியில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கிறேன். இது எமது அடுத்த தலைமுறையினருக்கு போரின் வடிவத்தை மாற்ற, இழந்துபோன அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவல்லது. இவற்றோடு நின்றுவிடாமல் எம்மினத்தின் அடையாளத்தை, இன்ப துன்பங்களை, வாழ்வியல்ப் போர்களை ஆவணப்படுத்த வேண்டுமாக.
- சுகன்யா ஞானசூரி.
19/05/2016
Friday, March 11, 2016
ஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்
சில கவிதைகளை வாசிக்கும்போது குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக்
கூட்டிவரும், பால்யத்தின் நினைவுகளில் பரவசம் கொள்ளும், காதல் நினைவுகளை
கிழர்த்திவரும், ஊரின் நினைவுகளோடு உறவாடும். அந்த மண்ணின் மனத்தினை,
மொழியினை பறைசாற்றும். இங்கு தோழர் "பா.செல்வகுமார்" அவர்களின் "ஒரு மழை வந்து போகவேண்டும்"
கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் அத்தனை நினைவுகளோடும் சாதியின்
பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைகளின் வலிகளையும் அழைத்து வந்தது.
வேறென்னத்தை நான் சொல்லிவிட?
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.
மீண்டும் "ஒரு மழை வந்து போகவேண்டும்" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.
- சுகன்யா ஞானசூரி,கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.
மீண்டும் "ஒரு மழை வந்து போகவேண்டும்" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.
அடையாளம்....
நீங்கள்
வெற்றியும் பெறலாம்
தோல்வியும் தழுவலாம்
ஓட்டுக்கள் பிரிந்தால்
நட்ட நடுவிலும் நிற்கலாம்
பேரம் நிகழ்த்தியபடி.
வெற்றியும் பெறலாம்
தோல்வியும் தழுவலாம்
ஓட்டுக்கள் பிரிந்தால்
நட்ட நடுவிலும் நிற்கலாம்
பேரம் நிகழ்த்தியபடி.
இம்முறையும்
உங்கள் தேர்தலுக்கு
நாங்கள்
பகடைகளாவதை அறிவோம்.
உங்கள் தேர்தலுக்கு
நாங்கள்
பகடைகளாவதை அறிவோம்.
சாதிய மரணத்துக்காகவும்
மதவெறி மரணத்துக்காகவும்
எதிர் முழக்கமிடும்
எழுத்தர்களும், உழுத்தர்களும்
எமக்காக வரப்போவதில்லை
இன்னும் பல
ரவீந்திரன்கள் மரணித்தாலும்!
மதவெறி மரணத்துக்காகவும்
எதிர் முழக்கமிடும்
எழுத்தர்களும், உழுத்தர்களும்
எமக்காக வரப்போவதில்லை
இன்னும் பல
ரவீந்திரன்கள் மரணித்தாலும்!
இயற்கையாகவும்
செயற்கையாகவும்
நிகழும் உபத்திரவங்களை
எங்கே சொல்ல?
எப்படிச் சொல்ல?
செயற்கையாகவும்
நிகழும் உபத்திரவங்களை
எங்கே சொல்ல?
எப்படிச் சொல்ல?
பெருங் குரலெடுத்துக்
கத்தத் திராணியற்று
விசும்பலோடு நகர்த்துகிறோம்
தகரக் கொட்டிலுக்குள்.
கத்தத் திராணியற்று
விசும்பலோடு நகர்த்துகிறோம்
தகரக் கொட்டிலுக்குள்.
அரசின் பதிவேட்டிலும்
இறப்புச் சான்றிதழிலும்
அங்க அடையாளங்களோடு
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
இறப்புச் சான்றிதழிலும்
அங்க அடையாளங்களோடு
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
மிச்சம் மீதியாயிருக்கும் உயிரை
காப்பாற்றப் போராடும்
அடிமையான அகதி நாங்கள்
வேறென்ன அடையாளம் சொல்ல?
காப்பாற்றப் போராடும்
அடிமையான அகதி நாங்கள்
வேறென்ன அடையாளம் சொல்ல?
- சுகன்யா ஞானசூரி,
Wednesday, March 9, 2016
மணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா
அரசாங்க அதிகாரிகளின் துணையின்றி, அரசியல்
ஆதிக்கத்தின் அரவணைப்பின்றி, மக்களின் பொறுப்பற்ற, பேராசை மனங்களின்றி
எந்தவொரு தவறும் இயற்கைமீது நிகழ்த்தப்படுவதில்லை. ஆற்றங்கரையோரமாய்
வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இன்று ஆற்றின் வளங்களை கொள்ளையடிக்கக்
கற்றுக் கொண்டது எந்த வகை நாகரிகத்திடமிருந்து என்பது கேள்வியாகவே உள்ளது.
நம்மைப்
பாதுகாக்கும் இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல், பெற்றவளின்
பிறப்புறுப்பை சிதைக்கும் வக்கிரம் பிடித்த பிள்ளையின் செயலுக்கு
ஒப்பானதாகவே நான் பார்க்கிறேன்.Wednesday, March 2, 2016
நட்சத்திரங்களினூடே...
இரவுப் பாடலை மரித்துவிட்டு
கருநீலப் போர்வைக்குள்
உறங்கும் ஆழ்கடலில்
நடு இரவின் நட்சத்திரங்களை
அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
கருநீலப் போர்வைக்குள்
உறங்கும் ஆழ்கடலில்
நடு இரவின் நட்சத்திரங்களை
அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
மெளன மொழியில் அவைகள்
அவனிடத்தில் எதையோ சொல்வதுபோல்
மின்னிக் கொண்டிருக்கின்றன.
அவனிடத்தில் எதையோ சொல்வதுபோல்
மின்னிக் கொண்டிருக்கின்றன.
ஊமைப் பெண்ணென நிலவும்
அமைதியாய் அழுதபடி
நசுக்கும் பூத முகில்களுக்கிடையில்
எட்டியெட்டிப் பார்க்கிறது.
அமைதியாய் அழுதபடி
நசுக்கும் பூத முகில்களுக்கிடையில்
எட்டியெட்டிப் பார்க்கிறது.
காற்றின் சலனமற்றுத்
தளும்பும் தோணியொத்த
ஊசலாடும் வாழ்வில்-அவன்
மனமும், மக்கள் வாழ்வும்.
தளும்பும் தோணியொத்த
ஊசலாடும் வாழ்வில்-அவன்
மனமும், மக்கள் வாழ்வும்.
காதுகளை கையால்
பொத்துவதும் எடுப்பதுமாய்
சத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்
ஒரு விசரனைப்போல்.
பொத்துவதும் எடுப்பதுமாய்
சத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்
ஒரு விசரனைப்போல்.
மூலை முடுக்கெல்லாம்
அழுது குழறிய
முள்ளி வாய்க்காலின்
மரண ஓலங்கள்-அவன்
காதுகளை செவிடாக்கி யிருக்கக்கூடும்....
அழுது குழறிய
முள்ளி வாய்க்காலின்
மரண ஓலங்கள்-அவன்
காதுகளை செவிடாக்கி யிருக்கக்கூடும்....
நள்ளிரவு தாண்டியும்
அவன்
நட்சத்திரங்களை எண்ணுகிறான்
ஊமை நிலவோடு சேர்ந்து...
அவன்
நட்சத்திரங்களை எண்ணுகிறான்
ஊமை நிலவோடு சேர்ந்து...
விடியலுக்குள்
எண்ணிவிடும் முனைப்போடு இருக்கும்
எண்ணிவிடும் முனைப்போடு இருக்கும்
அவனுக்கு தெரியாமல் இல்லை
வகை தொகை தெரியாமல்
அழிக்கப்பட்ட எம் உறவுகளை
நட்சத்திரங்களினூடே
வகை தொகை தெரியாமல்
அழிக்கப்பட்ட எம் உறவுகளை
நட்சத்திரங்களினூடே
எண்ணிவிட முடியாதென்பது.
- சுகன்யா ஞானசூரி.
எம் வாழ்வின் மிச்சமாய்...
அந்த
ஒற்றை மரத்தின்
உச்சக் கொப்பில்தான்
காதல் மொழி கதைத்தபடி
களித்திருந்தன
அத்தேசத்தின் பறவைகள்.
நடுநிசி கடந்து
இரண்டாம் சாமமொன்றில்
வேட்டைக் கூட்டமொன்று
ஊருக்குள் புகுந்திருப்பது தெரிகிறது
மிகச் சமீபமாய்க் கேட்கிறது
சுடுகுழலின் சத்தங்கள்.
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்.
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்குகுழி தாண்டியும்
பரவிக் கிடந்தன!
முறிந்த மரக் கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகினின்றும்
வழிந்தபடி இருக்கிறது
பெருந்துயரம் சுமந்த
வாழ்வின் நிகழ்வொன்று! - சுகன்யா ஞானசூரி.
Saturday, January 30, 2016
21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் "பொறிகள்" கவிதை கூட்டுத் தொகுப்பு.
பழைய
நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது,
அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி
சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள
இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பொறிகள்" எனும்
கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும்
எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை
பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது
எனக்கு.நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ
ஓயாது எங்கள்
நூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு
Wednesday, January 20, 2016
ஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.....
"வெகு மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அந்த மகா பெரிய ஓட்டுக்களை வாங்குவதற்கு ஆகிற மகா மகா செலவுகளை மறைமுகமாக ஏற்பது இந்த சர்வதேச சதி ஸ்தாபனம்தான்(பன்னாட்டு நிதி நிறுவனம்)."
"ஐரோப்பாவின் புதிய படையெடுப்பு" எனும் தலைப்பில் 1994 பிப்ரவரி "சாரதா" இதழில் "பெரியார் தாசன்" அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் குறித்து 20 வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு தீர்க்கமாக எழுதியுள்ளார்.
விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் நிகழும் சுரண்டல் அரசியலுக்கு வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஜி-7 அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஊட்டத்தைக் கொடுப்பதுபோல கொடுத்து பின்னர் மொத்தமாய் அவர்களது இரத்தத்தையே சுரண்டுவதுதான் இதன் நோக்கம் எனவும், அதற்காக உருவாக்கப்பட்டதே "டங்கல்" எனும் ஒப்பந்தம் என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு எழுதியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் முதலில் வேகமாக அமல்படுத்தியது தமிழ்நாடு (தீமைகளை முன்னெடுத்துச் செல்வதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச முடியாதுதான்) என்பதையும், இதனால் அன்றைய ஆண்டில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பது இல்லை என்று செய்தித் தாளின் முதல் பக்கத்தில் அறிக்கை விட்டதையும், போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டும் அதிகமாக ஆள் எடுக்கப்பட்டதையும், இவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வழி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆள்குறைப்பு செய்வதில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த டங்கல் ஒப்பந்தம் பெரிதும் உதவியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சூழலில் உலகம் சிக்கித் தவிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உற்பத்திகளையெல்லாம் சுரண்டிவிட்டதை நம் ஒவ்வொரு விவசாய மண்ணையும் பறிகொடுத்ததில் உணர முடிகிறது. வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகள் செய்கின்ற ஒப்பந்தங்களின் பின்னணியில் இப்படியான அரசியல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மேலெழுவதை தவிர்க்க இயலாது.
வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.
(இந்த இதழை மின்னச்சு வடிவில் எனக்கு அனுப்பி உதவிய
கிருத்து. இராமதாசு ஐயா துபாய்(பெரம்பலூர்) அவர்களுக்கு எனது நன்றிகள்.......)
Friday, January 15, 2016
அன்றைய ஒரு பொங்கல் நாளில்.....
அன்றைய ஒரு
பொங்கல் நாளில்தான் 15.01.20016
துளித் துளியாய்....
@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம் யாருமற்ற கானகத்தில்
@
@
@
@
@
@
@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?அக்கினிக் குஞ்சு...
அக்கினிக் குஞ்சென
உயிர்தெழ விரும்பேன்.##############################
Wednesday, January 6, 2016
பிரமிள் 19 வது நினைவுநாள்.....
இன்றைய தினம் படிமக் கவி பிரமிள் நினைவு நாள்(சனவரி-06-1997)....
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....
- சுகன்யா ஞானசூரி,
06/01/2016.
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....
- சுகன்யா ஞானசூரி,
06/01/2016.
Monday, January 4, 2016
Earth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்
புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி அமைப்பினர், கந்தர்வன் அரங்கத்தில் (புதுகை கம்யுனிஷ்ட் அலுவலகத்தில்)
நேற்றைய தினம் (03.01.2016) மாலையில் ஒரு திரைப்படத்தை திரையிட்டனர்.
தஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.
எரிக்
குய்ச்சர்ட் (Eric Guichard) இன் ஒளிப்பதிவு ஆப்கானிஸ்தானின் இதுவரை
பார்க்காத பாலைவன மலைகளையும், புழுதிகளை கிளப்பிச் செல்லுகின்ற
பயணங்களையும், ஆள் அரவமற்ற பகுதிகளையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருக்கின்ற சில சிதிலமடைந்த வீடுகளையும், கருமை சூழ்ந்த சுரங்கத்தின்
அருகில் இறுதியாக பசுமையான சில காட்சிகளையும் எதார்த்தமாக படம்
பிடித்திருக்கிறார். தஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.
யுத்தத்திற்கு முன்னால் வரை காது
கேட்கும் நிலையில் இருந்த யாசின் பின்பு ஒவ்வொரு இடத்திலும் சப்தங்களை
கேட்க முயற்சித்த வண்ணம் இருக்கிறான். குழந்தைகள் எப்போதும் தம்
இயல்பிலிருந்து மாறுவதே இல்லை, சிறுமியோடு பகிர்ந்து உண்பதிலும், ஒரு
ஆடுடன் விளையாடுவதிலும் (மிதிவெடியில் சிக்கி இறந்து போகிறது அந்த ஆடு),
ராட்டில் சுற்றுவது என குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என படம்
முக்கால்வாசியும் வியாபிக்கிறான்.
தஷ்தாகிரின்
நினைவுகளில், குண்டு விழுந்த வீட்டுக்குள் மருமகள் ஷைநாப் நிர்வாணத்தோடு
எரிந்து இறப்பது அடிக்கடி வந்து துன்பத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும்
அவர் அவளது நிர்வாணத்தை மறைக்க துணியோடு ஓடுகின்றார். சுரங்கத்தில் வேலை
செய்யும் மகனிடத்தில் அவன் மனைவியும், சகோதரியும், அம்மாவும்
இறந்துவிட்டதையும், மகனுக்கு கேட்கும் திறன் போனதையும் சொல்வதற்காக
செல்வதும், இறுதிவரை மகனைப் பாராமல் அவன் பரிசாகக் கொடுத்த அந்த
புகையிலைப்பொடி வைக்கும் அழகிய டப்பி ஒன்றை அங்குள்ள அலுவலரிடத்தில்
கொடுத்து நாங்கள் உயிரோடு இருப்பதை என் மகன் நம்புவான் என கூறிவிட்டு
வேறொருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்ட பேரனைக் காண புறப்படுவதோடு
ஒரு வலி நிறைந்த கவிதையென முடிகிறது படம்.
யுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.
யுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.
விரசத்தை
உண்டுபண்ணும் துக்கடாத் துணிகளோடு நாலு பாட்டும், எதார்த்தத்தை மீறிய நாலு
சண்டையும் வைத்து (காக்கா முட்டை போன்ற படங்கள் தவிர்த்து) படம்
எடுக்கின்ற தமிழ்ச் சினிமா எப்போது தன்னை மாற்றிக்கொள்ளும்? கதைவளம்
கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சினிமாவில் பேய்ப் படங்களும், நகைச்சுவை எனும்
பெயரில் அபத்தங்களைக் கொண்ட்டாடுவதும், பணம் சம்பாதிக்கும் விதமாக ஒரே
நடிகர், நடிககைகளைக் கொண்டாடுவதும்தான் அடையாளமா?
2004 ல் கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்பட்ட படம்.ஐயா இளங்கோ அவர்களும், புதுகை செல்வா அவர்களும் இந்த விழாவினை ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மு.கீதா அம்மா, வைகறை அண்ணன், சிறுகதையாளர் அண்டனூர் சுரா, விமர்சகர்கள் ஸ்டாலின், சுரேஷ் மான்யா, பத்திரிக்கையாளர் புதுகை மதியழகன் போன்றவர்களோடு இன்னும் பெயர் தெரியாத பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் என்னையும் கலந்துகொள்ள வைத்து இந்த திரைப்படம் குறித்து பேசும்படி பணித்த ஐயா இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் மொழியில் திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
Saturday, November 14, 2015
கவிதைகள் - 4
1.
ஏதோவொரு பாடல்
யாரோ ஒருவரின்
கடந்த கால
நினைவுகளை மீட்டக்கூடும்....
உணர்ந்துகொள்ள முடிகிறது
எனது பால்யத்தின்
நினைவுகளை மீட்டுகின்ற
ஒரு பாடலில்!
2.
சிறு கல்
விழுந்த குளத்தின்
அதிர்வென விரியும்
வட்டச் சுழலில்
நினைவதிர் வொன்று
சுழன்றபடி இருக்கிறது
ஒரு பாடல்
நுழைந்த மனதில்!
- சுகன்யா ஞானசூரி
Sunday, October 25, 2015
லிமரைக்கூ கவிதைகள் நிரல்-2
24.
தெய்வங்கள் கேட்டதா பலி?
படையலும் பந்தியுமாய் கொடையிட்ட மக்கள்
மனங்களில் இல்லை வலி!
25.
25.
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்
போதையில் பாதை மாறிய இளைஞர்கள்
இதுவே உண்மை நிலவரம்!
26.
26.
இன்னும் நீளுது வறுமை
மக்களின் வரியில் ஆடம்பரச் செலவுகள்
அரசின் கஜானா வெறுமை!
27.
27.
தமிழகத்தின் சிறப்பு முகாம்
அகதிகள் நலனில் அக்கறையற்ற
அரசின் இன்னொரு முகம்!
28.
28.
சம்மதத்திற்கான அறிகுறி
சொல்லியது நாணல் கொண்ட
பெண்ணின் முகக்குறி!
29.
29.
பேருந்தில் இருந்த ஓட்டை
பெண் விழுந்த அவலக் காட்சி
கேவலமாக்கியது அரசு நாட்டை!
30.
30.
குழந்தைகள் மரணம்
அரசைத் தவிர மக்களுக்கு
ஆறாத இரணம்!
31.
31.
உழைப்புக் கேற்ற ஊதியம்
எந்தத் துறையிலும் இதுவரை கிட்டவில்லை
சங்கங்கள் அரசுடன் மோதியும்!
32.
32.
காட்டாறாய் வரவில்லை காவிரி
கடமைடைவரை நீரில்லை; பயிரிட்ட கழனி
பூண்ட கோலமோ தலைவிரி!
33.
33.
தெருவுக்குத் தெரு கட்சி
தெளிவற்ற கொள்கை; மலிவான அறிக்கை
இதுதான் மக்கள் ஆட்சி!
34.
34.
சொகுசாய்ச் செல்கிறது பயணம்
விபத்துகள் நேர்வது சகஜம்; நாற்கரச்
சாலை தந்த உபயம்!
35.
35.
புத்தம் சரணம் கச்சாமி
காணி நிலத்தினில் இலட்சம் தமிழரைக்
கொன்றழித்துப் போட்டது ஏன்சாமி!
36.
36.
மக்கள் கூட்ட நெரிசல்
சல்லாபம் தேடும் பொல்லாத
வக்கிர உடல்களின் உரசல்!
37.
37.
மரங்கள் இல்லை காட்டில்
வனப்பாய் இருக்கிறது வண்ணக் குரோட்டன்கள்
வனத்துறை அமைச்சரின் வீட்டில்!
38.
38.
பறித்த மலர்கள் கட்டிலில்
விடிந்ததும் முடிந்தது வாடிய மலர்களை
வீசினர் குப்பைத் தொட்டியில்!
39.
39.
பதுக்கியவருக்கு வழங்கப்பட்டது வாய்ப்பு
முன்வரவில்லை பெயர்ப் பட்டியல் தருவதற்கு
தொடர்கிறது வரி ஏய்ப்பு!
40.
40.
ஆற்று மணல் கொள்ளை
நிலத்தடி நீர் வற்றிய பூமியில்
மூன்று போகமும் இல்லை!
41.
41.
வட்டிக் கடையில் அடகு
மூழ்கியது நகையோடு வைத்த மீனவன்
கடலில் உடைந்த படகு!
42.
42.
மலர் தேடிவந்த வண்டு
கடித்தது ஆத்திரம் கொண்டு தேன்
மலரைச் சூடிய பெண்டு!
43.
43.
உணவுதேடி வருகிறது தேனீ
மலர்களற்ற செடிகள் சுமந்த காணி
நிற்கிறது வெட்கத்தில் கூனி!
44.
44.
எழுதினான் இறுதி மடல்
நிறைவேறாத காதல் நிம்மதியற்று; காதல்
நோய் சுமந்த உடல்!
45.
45.
நடையைக் கட்டின வயல்நண்டுகள்
நாகரிக உலகில் பார்க்க முடிவதில்லை
நாற்று நடும் பெண்டுகள்!
46.
46.
முடித்தார் தலைவர் நடைப்பயணம்
தேர்தலில் வென்றதும் மக்களை மறந்து
செல்வார் இன்ப சுற்றுப்பயணம்!
- சுகன்யா ஞானசூரி,
லிமரைக்கூ கவிதைகள் நிரல்-1
1.
மங்கை ஒருத்தி வந்தாள் 2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
எரிந்தாள் ஆத்தா கருமாரி!
17.
காய்ந்த குளத்தோரம்
செழிப்பாய் வளர்ந்து நிற்கிறது
கருவை மரம்!
18.
18.
பனை ஓலையில் வீடுகள்
கூட்டாய் வாழச் சொல்கிறது
தூக்கணாங் குருவிக் கூடுகள்!
19.
19.
முளைத்தன விதிமீறிய கட்டிடங்கள்
சுமை தாங்காது சரிந்த மலையில்
புதையுண்டு கிடக்கின்றன சடலங்கள்!
20.
20.
நிகழ்கின்றன தொடர்கதையாய் படுகொலைகள்
மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு
கண்துடைப்பாய் நீளும் விசாரணைகள்!
21.
21.
புதனுக்குக் காணிக்கையா ஈழம்?
மீண்டெழும் இனம் தமிழினம் மறந்து
கெக்கலிக்கிறது கூட்டாய்ச் சிங்களம்!
22.
22.
அளவோடு உண்பீர் விருந்தை
மறப்பின் அனுதினம் அவதிகள் பெற்று
அன்றாடம் கைக்கொள்வீர் மருந்தை!
23.
23.
நுளம்புக் கடியோ தொல்லை
மலேரியா, டெங்கு நீளும் வியாதிகள்
போதிய விழிப்புணர்வு இல்லை!
- சுகன்யா ஞானசூரி,
ஹைக்கூக்கள்
#அடர்வன இருள்
கொஞ்சம் வெளிச்சம்
மின்மினிகள்!
#சாதிகள் பார்க்காது
வேலிகள் தாண்டும்
காற்றும் காதலும்!
#பறக்கத் தவிக்கிறது
காற்றில் அசையும் உதிர்ந்த
இறகு!
#அடுக்ககக் கட்டிடத்தின் எழுச்சி
அழுது சரிகிறது
மலைகள்!
#அரிதாரம் பூசிய அழகி
அழகாய்ப் பறக்கிறாள்
வண்ணத்துப் பூச்சி!
#பால்வடியும் முகம்
பயமற்று இரவு உலா
முழுநிலவு!
#அளவுக்கதிக போதை
தாறுமாறாய் சுற்றுகிறது
ரீங்கார வண்டு!
#மலர்களை நாடும்
மது விரும்பிகள்
தேனீக்கள்!
#யார் உதைத்துத் தள்ளியது
ஆக்ரோசமாய் விழுகிறது
அருவி!
#மேகக் குடம் உடைந்தது
மலைவழியே வடிகிறது
அருவி!
#என் முகத்தில்மட்டும் தூறல்
செல்லக் குழந்தை துப்பிய
எச்சில்!
#ஒற்றைக்கால் கொக்கின் காத்திருப்பும்
உறுமீன் வரவும் உயிர்ப்போடு
சித்திரத்தில்!
#கரைமீது அதீத காதல்
கரைபுரண்டு ஓடுகிறது காட்டாற்று
வெள்ளம்!
@
சோம்பல் முறித்து
எழுகிறான் கீழ்வானில்
ஆதவச் சிறுவன்!
@
பஷ்பமானது பனித்துளி
காலை வேளை
பகலவன் பார்வை!
@
இரவு கூடல்
அதிகாலைப் புல்மேல்
பனி!
@
பயணக் களைப்பு
கடலில் ஓய்வு
நதி!
@
எண்ணற்ற மரங்களை அழித்து
எண்ணிட்ட மர நடுகை
நெடுஞ்சாலை!
@
ஆபாசமற்ற
குளியல் காட்சி மழையில்
வண்ணத்துப் பூச்சி!
@
ஆகாயத்தில் பறக்கும் அட்டையென
ஆற்றுப் பாலத்தில்
இரயில்!
@
உடைந்து கிடந்தது
முகில்களுக்கிடையில்
நிலவு!
@
தேகம் சிலிர்த்தது
தீண்டியது
தென்றல்!
- சுகன்யா ஞானசூரி,
கவிதைகள்-3
தமிழ்ப் பண்பாடு தேவை!அம்மா, அப்பா என்ற வார்த்தை
அரிச் சுவடியோடு போயே போச்சு!
மம்மி, டாடி என்றால் இப்போ
பெத்தவங்க மனம் குளிர்வ தென்றாச்சு!
தமிழ் என்றால் நாகரிகம் அற்றவராம்!
அயலவர் மொழிகள்தாம் சுவாசக் காற்றாம்!
நாகரிகம் தோன்றிய ஆதி நாட்களின்
தாய் மொழியே தமிழ் மொழிதானே!
இதை மறுப்பவர் வருவீர் என்னோடு!
பல ஆதாரம் செப்புவேன் பதத்தோடு!
பண்பட்ட சமூகம் தோன்றிட வந்த
மூத்த மொழி தமிழ் மொழி!
புண்பட்டு நிற்குது இன்றைய தலைமுறையில்!
புடம் போட வருவீர் இளையோரே!
முன்னேறிய உலகில் பண்பாடு தேவை!
மூச்சுக் காற்றில் தாய்மொழியை நீவை!
எத்தேசம் சென்றாலும் எந்நிலை நோற்றாலும்
பொற்காசு கிடைத்திடுமென பொல்லாங்கு செய்யாதே!
அப்பால் உளரெல்லாம் ஆர்ப்பரிப்பர் உன்மீதல்ல
இப்பால் உள்ளஉன் தாய்மொழி தமிழ்மீதே!
எந்நாளும் இதை மறவாதீர் இளையோரே!
பொன்நாளும் அமையுமே பண்பட்ட தமிழாலே!
இந்நாளே வளர்த்திடு இனியதமிழ்ப் பண்பாடு!
முன்னேறிய உலகிலே முன்னாலே சென்றிடு!
==============================
அலைகளின் மீதலைதல்!
கடற்கரைக் காற்றினை
சுவாசிப்பவர்களே....
அலைகளில் கால்
நனைப்பவர்களே....
கொஞ்சம் நில்லுங்கள்.
வெட்டி வீழ்த்திய
மரக் கிளைகளாய்
மனித உடல்கள்
பிணக் குவியல்களாய்
ஈழ தேசம்
சவக் காடாய்....
உரிமைகள் கேட்டு
உடைமைகளை இழந்து
உறவுகளை விட்டு
புலம் பெயர்ந்தவர்கள் - நடுக்கடலில்
அக்கரையா இக்கரையா
தெரியாத வைகறையில்
உடைந்துபோன படகில்
உயிரை விட்டு.
காற்றோடு சேர்ந்து - அலை
கரை சேர்க்குது
பிரிந்துவிட்ட உயிர்களின்
மரண ஓலங்களை.....
மறந்தும்
கால் நனைப்பதாய்
மிதித்து விடாதீர்கள்
கரை தேடியே
அலைகளின் மீதலைகின்றது
அவர்களின் ஆன்மாக்கள்!
============================== ==========================
==============================
முதிர்கன்னி!
மிக்சரும் பபல
தேநீர்க் குவளைகளும்
பரிமாறியாச்சு.......
இன்னும்
சில நாட்களில் - வயது
நாற்பதை எட்டிவிடும்
ஏக்கத்தோடு
முதிர்கன்னி!
============================== ==========================
==============================
அழகி!
கறுப்புப் பேரழகி
கிளியோபாட்ரா
இந் நூற்றாண்டில்
வாழ்ந்திருந்தால்.....
அழகி எனும்
அந்தஸ்து கிடைக்காமல்
அழுதழுதே இறந்திருப்பாள்!
சிவப்புத் தோல் - மட்டுமே
அழகெனத் தீர்மானிக்கின்றன
விளம்பர நிறுவனங்கள்!
============================== ==========================
==============================
சுதந்திர தேசத்தின் அடிமைகள்!
யார் சொன்னது
இந்த நாடு
வெள்ளைய ரிடமிருந்து
சுதந்திரம் பெற்றதென?
டோமினாஸ் பீட்ஷாவுக்கும்
கே ஃ எப் சி சிக்கனுக்கும்
இன்றைய
இளைய தலைமுறை
அடிமையாகி இருக்கையில்!
============================== ==========================
==============================
நகரத்து மழை!
கொட்டித் தீர்த்த
கோடை மழையில்
கால் நனைத்து - காகிதக்
கப்பல் விட்டு
கொண்டாட முடியவில்லை....
நகரத்தின் கழிவுகளோடு
பயணிக்கிறது
மழை நீர்!==============================
தீ....
அக்னி
மீது ஏனோ
அடங்காத
கோபம் எனக்கு....
அக்னி
மீது ஏனோ
அடங்காத
கோபம் எனக்கு....
மழை நனைத்த
ஏழையின் குடிசையில்
அடுப்பெரிக்கத் தடுமாறிய
தீ....
ஏழையின் குடிசையில்
அடுப்பெரிக்கத் தடுமாறிய
தீ....
கெட்டவர்
கரம் தீண்டியதும்
எப்படி முடிந்தது
சட்டென்று
பற்றி எரிக்க? - அந்த
ஏழையின் குடிலை!
==============================கரம் தீண்டியதும்
எப்படி முடிந்தது
சட்டென்று
பற்றி எரிக்க? - அந்த
ஏழையின் குடிலை!
நினைவுகளில்!
கிளுவை முள்முருக்கு
பூவரசமரக் கதியால்களோடு
தென்னை
பனையோலை வேலியென
நிழல் தரும்
ஒழுங்கைகளில் நான்
ஓடியாடி விளையாடினேன்!
கிளுவை முள்முருக்கு
பூவரசமரக் கதியால்களோடு
தென்னை
பனையோலை வேலியென
நிழல் தரும்
ஒழுங்கைகளில் நான்
ஓடியாடி விளையாடினேன்!
ஆளுயர
நெல் வயலில்
பட்டம் விட்டு
மகிழ்ந்திருந்தேன்!
நெல் வயலில்
பட்டம் விட்டு
மகிழ்ந்திருந்தேன்!
உப்புக்
காற்று வீசும்
அந்தி
மாலைப் பொழுதுகளில்
கடல்
அலைகளில் கால்நனைத்து
களிப்புற்றிருந்தேன்!
காற்று வீசும்
அந்தி
மாலைப் பொழுதுகளில்
கடல்
அலைகளில் கால்நனைத்து
களிப்புற்றிருந்தேன்!
மாரி
காலக் குளங்களில்
மீன்
என எண்ணி
வால்
பேத்தைகள் பிடித்து
இரசித்திருந்தேன்!
காலக் குளங்களில்
மீன்
என எண்ணி
வால்
பேத்தைகள் பிடித்து
இரசித்திருந்தேன்!
அழகிய
என் கிராமத்தின்
இந்த
நினைவுகளைத் தவிர
இன்று
என் தேசமும்
என்னிடமில்லை!
என் கிராமத்தின்
இந்த
நினைவுகளைத் தவிர
இன்று
என் தேசமும்
என்னிடமில்லை!
============================== =========================
பிக்காசோக்கள்!
தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...
சுண்ணம் கொண்டு...
தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.
அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.
பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...
ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!
பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!
எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!
ஆம்
நெட்டித் தள்ளும் - அவன்
நெஞ்சு எலும்புகளின்
எண்ணிக்கையை காட்டிலும் எண்ணிலடங்கா
ஓவியங்களை - அவன்
தீட்டிக் கொண்டேயிருக்கிறான்!
நெட்டித் தள்ளும் - அவன்
நெஞ்சு எலும்புகளின்
எண்ணிக்கையை காட்டிலும் எண்ணிலடங்கா
ஓவியங்களை - அவன்
தீட்டிக் கொண்டேயிருக்கிறான்!
அடுத்தடுத்த சாலைகளிலும்
இவன்போல்...
ஆயிரமாயிரம் பிக்காசோக்கள்
இன்னுமின்னும் எதையெல்லாமோ
தீட்டிக் கொண்டேயிருப்பார்கள்
ஒருவேளை உணவுக்காக.
இவன்போல்...
ஆயிரமாயிரம் பிக்காசோக்கள்
இன்னுமின்னும் எதையெல்லாமோ
தீட்டிக் கொண்டேயிருப்பார்கள்
ஒருவேளை உணவுக்காக.
- சுகன்யா ஞானசூரி.
Subscribe to:
Posts (Atom)













