Monday, October 19, 2020

ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

 


"ழாக் தெரிதா" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என எல்லா தளத்திலும் தனது கட்டவிழ்ப்பு எனும் புதுவகைச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பியர்களின் கருத்துக்களை நிர்மூலமாக்கியவர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டவிழ்ப்பின் செயலால் நண்பர் ஒருவருக்கு ஆதரவாக எழுதி கட்டவிழ்ப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கி இறுதிக்காலத்தில் மெளனிக்கப்பட்டவர். மார்க்சியத்தையும் கட்டவிழ்ப்பு செய்து மார்க்சியர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.  


எம்.ஜி. சுரேஷின் இந்தச் சிறுநூல் அறிமுக வாசிப்பாளர்களுக்கு ஆகச் சிறந்த ஒரு கையேடு என்றே சொல்வேன். எளிமையான எடுத்துக்காட்டுகளோடு குறியியல் குறித்தும் பிராய்டிசம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். அடையாளம் பதிப்பகத்தின் பின்நவீன சிந்தனையாளர் வரிசை நூல்களில் மற்றவற்றையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எழுகிறது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். 


- சுகன்யா ஞானசூரி

19/10/2020.

நன்றி: Markandan Muthusamy ஐயா.

2 comments:

  1. இதுவரை அறிந்திராத பொருண்மையினைப் பற்றிய நூலின் மதிப்புரை, இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. நன்றி.

    ReplyDelete