Saturday, November 14, 2015

கவிதைகள் - 4


1.
ஏதோவொரு பாடல்
யாரோ ஒருவரின்
கடந்த கால
நினைவுகளை மீட்டக்கூடும்....
உணர்ந்துகொள்ள முடிகிறது
எனது பால்யத்தின்
நினைவுகளை மீட்டுகின்ற
ஒரு பாடலில்!


2.
சிறு கல்
விழுந்த குளத்தின்
அதிர்வென விரியும்
வட்டச் சுழலில்
நினைவதிர் வொன்று
சுழன்றபடி இருக்கிறது
ஒரு பாடல்
நுழைந்த மனதில்!

- சுகன்யா ஞானசூரி

3 comments:

  1. உண்மைதான்பா....அந்தக்காலக்கட்டதிற்கே அழைத்து செல்லும் வலிமை உடையவை..

    ReplyDelete
  2. நன்றி தனபால் ஐயா, நன்றி கீதா அம்மா...

    ReplyDelete