Sunday, January 15, 2017

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

பத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.
எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)

எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)

அகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

வாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.
முனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.

வாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

- சுகன்யா ஞானசூரி
15/01/2017

14 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு அன்பும் நன்றியும்

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா

      Delete
  3. Replies
    1. வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

      Delete
  4. அருமையான அனுபவப் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையில் மகிழ்கிறேன்... அன்பும் நன்றிகளும் ஐயா

      Delete
  5. புத்தக அறுவடை முடிந்து விட்டதா!!

    ReplyDelete
    Replies
    1. எனது அறுவடை முடிந்தது ஐயா. உணவினை மறந்து காலை முதல் மாலை வரை புத்தகங்களோடு இருந்தது ஒருவித மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. முதல்முறையாக சென்னை புத்தகச் சந்தைக்கு சென்றேன்.

      Delete
  6. வாழ்த்துக்கள்,,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா

      Delete