Saturday, December 17, 2016

வருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை

வணக்கம் வலைப்பூ உறவுகளே...

சென்றாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான சந்திப்பே வலைப்பூவில் என்னையும் இணைத்துக் கொண்டது. உலகமெங்கிலும் இருந்து திரளான வலைப் பதிவர்கள் பங்குபற்றி விழாவினை வெற்றிபெறச் செய்தனர்.

இப்போதுதான் புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். அதற்குள் மீண்டுமொரு நிகழ்வினை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வாருகின்றனர்.

 புதுக்கோட்டையில் வலைப்பதிவுகள் தொடர்பாக பயிற்சி பட்டறை ஒன்றினை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18/12/2016) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.

விழா அழைப்பிதளினை இதில் இணைத்துள்ளேன். மேலதிக விபரங்களுக்கும், விளக்கங்களுக்கும் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவார்களின் வலையில் காண வேண்டுகிறேன்.

சரியான முன்தயாரிப்புடன் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து வரும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

4 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி... சந்திப்போம்...

    ReplyDelete
  2. வணக்கம் பா நலமா?அவசியம் நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா. சுகமாக உள்ளேன். நாளை நிச்சயம் சந்திப்போம் அம்மா

      Delete