பழைய
நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது,
அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி
சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள
இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
"பொறிகள்" எனும்
கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும்
எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை
பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது
எனக்கு.
சபா.ஜெயராசா, எம்.எச்.எம்.சம்ஸ், திக்குவல்லை.கமால்,
கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ராதேயன், சண்முகம் சிவலிங்கம்,
செந்தீரன், அன்பு டீன், சிவம், சௌமினி, பாலமுனை பாருக், ஷெல்லிதாசன்,
நா.லோகேந்திரலிங்கம், யோனகபுர-ஹம்சா, அன்பு.ஜவகர்சா, நீள்கரை நம்பி,
அ.யேசுராசா, ச.வே.பஞ்சாட்சரம், பா.ரத்னசபாபதி ஐயர், ஏ.இக்பால்,
மு.சடாட்சரன், தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.சண்முகலிங்கன்,
பேனா.மனோகரன், ஆதவன், வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.கோவிந்தராஜன், இரா.சுகுணசபேசன்,
சேரன், டானியல் அன்ரனி, அ.புராந்தகன், சி.குமாரலிங்கம், திருமலை சுந்தா,
முருகு, வதிரி சி. ரவீந்திரன், மூதூர் முகைதீன், இரா.நாகராசன், பூநகர்
மரியதாஸ், ஜவாத் மரைக்கார், சரவணையூர் சுகந்தன், மற்றும் திக்குவல்லை
இனாயாஹ் என நாற்பத்து நான்கு (44) கவிஞர்களின் கவிதைகளோடு 1974 இல்
வெளியாகியுள்ளது.
ஈழத்தில் புதுக்கவிதைகளின் தோற்றம் என்பது,
தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு மகாகவி சுப்பிரமணி பாரதியோ அதுபோல ஈழத்துக்கு
மஹாகவி எனும் உரித்திரகுமாரன் அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது.
அறுபதுகளின் துவக்கத்தில் ஈழத்தில் புதுக்கவிதை பல இடையூறுகளுக்கு
மத்தியில் மொட்டவிழ்த்துள்ளன.
No comments:
Post a Comment