வாசிப்பை நேசிப்போம் வழி அறிமுகமான ப்ரதீஷ் எனும் நண்பர் மூலமாக எனக்கு வாசிக்கக் கிட்டியதுதான் இந்த நாவல். இதை நாவல் என சொல்வதைக் காட்டிலும் அதீதமான கற்பனைகள் நிரம்பிய ஒருவரது சுயசரிதை என்பேன். என் நன்றிகளை நண்பர் ப்ரதீஷ் அவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்.
பலரும் பல்வேறுவிதமாக இதை விமர்சனம் செய்திருப்பதை அறிவேன். அதனால்தான் நண்பர்கள் என்னிடம் இதைப்பற்றி விவாதம் செய்யும்போதுகூட அமைதியாக இருந்திருக்கிறேன். வாசிக்காமல் நாம் எந்த முடிபுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன்.
மின்னஞ்சல் வாயிலாக தினமும் ஜெயமோகன் அவர்களது பத்தி எழுத்துகளை வாசிப்பவன். எழுத்து வசீகரத்தை குறைசொல்ல ஏலாது. அதற்காக அந்த எழுத்துகளை, மொழியை தவறாக பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள இயலாதுதானே? அப்படியாகத்தான் இந்த நூல் முழுவதும் சகித்துக்கொள்ள இயலாத அபத்தமான, ஆபாசமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.
எந்த ஒரு போராட்டக் குழுவும் விமர்சனத்துக்கு உட்படாமல் இயங்க இயலாது. இதுதான் நியதி. அப்படித்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும். கொரில்லா முறை போரிலிருந்து மரபு ரீதியான இராணுவ அமைப்பாக தங்களை கட்டமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். இறுதிக்கட்டப் போரில் புலிகள் செய்த தவறுகளை நானும் விமர்சனப் பார்வையோடுதான் பார்க்கிறேன்.
உலோகம் ஒரு சினிமா பாணியில் எழுதப்பட்ட மாபியாக் கூட்டத்தின் கதையாகவே என்னளவில் இருக்கிறது. விந்தின் துர்நாற்றமும், இரத்தத்தின் கவுச்சியும், பாலியல் வறட்சி, புகை வாடை, அதீதமான செயல்பாடுகள் என நூல் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது.பெண்ணுடல் மீதான வேட்கை அபத்தமானது. இது புலிகள் அமைப்பில் இல்லாத ஓன்று என்பதை அனைவரும் அறிவர். அதே நேரம் "ரோ" எனும் உளவு அமைப்பை அதிசிறப்பான ஓர் அமைப்பாக காட்ட முனைந்திருக்கிறார். அதன் விளைவு புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தி கதையை நகர்தியிருக்கிறார். ரோ வின் செயல்பாடுகளை ஈழ வரலாறு உள்ளவரை மாற்றி எழுத இயலாது. அதன் கசப்பான நிகழ்வுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்றைக்கும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதன் கசப்பான சம்பவங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன என்பதும் ஆசிரியர் அறிவார்.
"உலோகம் கறல் ஏறிய தகரத் துண்டு" என்றுதான் வாசித்து முடித்ததும் உணர்ந்துகொண்டது.
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:9
தலைப்பு: உலோகம்-நாவல்
ஆசிரியர்: ஜெயமோகன்
மொத்தப் பக்கம்: 140 (மின்நூல்)

ஜெயமோகன் - எனக்கு ஏனோ அவர் எழுத்துகள் பிடிப்பதில்லை - படித்தது ஒன்றோ இரண்டோ தான். அதற்கு மேல் படிக்க விருப்பமில்லை.
ReplyDeleteஉண்மைதான் ஐயா. இதுதான் நான் முதன்முதலில் அவரைப் படிக்கும் நாவல்.
Deleteநேர்மையான நூல் அறிமுகம் (விமர்சனம்)
ReplyDelete