Monday, March 26, 2018

அகதிகள் வீடடைதல்!

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்...
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
கருப்பானதாகவும், இழுப்பு வந்ததாகவும்
அம்மாவோ, அக்காவோ, மனைவியோ
ஏன் பெண் துணையில்லாத ஆணோ
பேசியதை நீங்கள் கேட்டதுண்டா?
இதோ மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும், கேரம் விளையாட்டோடும்...
ஊர் பேச்சோடு நகரும் சூரியனை
நீங்கள் பார்த்ததுண்டா?
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம்
உங்களுக்கு அவர்களோடு உறவாடத் தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறோம்
என்றால் உங்களால் நம்பவே முடியாதுதான்.
பத்துக்குப் பத்து எனும் கணித சூத்திரத்தை
யார் கண்டு பிடித்தது?
ஏன் இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
எங்கள் கல்லறையின் அளவை?
அந்திக் கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடை பெறுகிறோம்
மரங்களை விட்டு...
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது...
உங்களுக்குத் தெரியுமா?
மண்ணெண்ணைக் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம் என்பது?
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது...
சவங்களைக்கூட இரவுகளில்
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்...
கொஞ்சம் குளிர் மெல்லப் பரவுகிறது...
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது.
மீண்டும் மரங்கொளோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர் கதையாகிறது.
சொல்ல மறந்துவிட்டேன் கோடையிலும்
அதிகாரத்தின் அடக்குமுறைக்கு ஓய்வில்லை.

சுகன்யா ஞானசூரி

9 comments:

  1. மனதைத் தொட்ட கவிதை. தமிழகத்தில் இருக்கும் ஒரு அகதிகள் முகாமிற்கு அலுவல் நிமித்தமாக சென்றதுண்டு - பல வருடங்கள் முன்னர்.

    ReplyDelete
  2. அகதிகள் வீடடைதல் - நல்ல கவிதை. நன்றி. இரா முத்துசாமி http://agharam.wordpress.com

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சூரி..
    ஓவியம் வரைய தொடங்கிவிட்டீர்கள் போல

    ஒவ்வொரு வார்த்தையிலும் கண்முன் காட்சியாய் வாழ்ந்த வலி

    உங்கள் கோடுகளில் புதிதாக ஒன்றுமே இல்லை எல்லாம் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததுதான் ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் தொலைந்த ஓவியம் கிடைத்த ஆர்வத்துடன்

    நமது இருப்பை வலியை பதிவு செய்யும் உங்கள் ஓவியங்கள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன் அண்ணா... அன்பும் நன்றிகளும் என்றென்றும்...தொடர்ந்து எழுதுங்கள்...

      Delete
  4. வாழ்த்துக்கள் சூரி..
    ஓவியம் வரைய தொடங்கிவிட்டீர்கள் போல

    ஒவ்வொரு வார்த்தையிலும் கண்முன் காட்சியாய் வாழ்ந்த வலி

    உங்கள் கோடுகளில் புதிதாக ஒன்றுமே இல்லை எல்லாம் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததுதான் ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் தொலைந்த ஓவியம் கிடைத்த ஆர்வத்துடன்

    நமது இருப்பை வலியை பதிவு செய்யும் உங்கள் ஓவியங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சூரி..

  6. வாழ்த்துக்கள் சூரி..