நாடிலி ..
அன்பு நண்பர் சுகன்யா ஞானசூரியின் "நாடிலி" கவிதை நூல் படித்தேன்.
முதல் கவிதை முதல் கடைசி கவிதை வரை...புலம் பெயர்ந்த தமிழர்களின் வலி மட்டுமே.
அவரை சந்திக்கும் போதெல்லாம் ...இலங்கை பிரச்சனை குறித்தும், போர்க் காலச் சூழல் குறித்தும், அவரின் பால்ய வயதில் அவர் சந்தித்த வலிகள், அங்கிருந்த அரசியல் சூழல், சிறு வயது பாலகனாய் இருக்கும் போது படகில் வரும் போது படகில் ஓட்டை விழுந்து உயிரை பணயம் வைத்து வந்து சேர்ந்த வலிகள் எல்லாம் பகிர்வார். இடையிடையே சிறு புன்னகை அவரின் வலியை மறைத்து, அந்த புன்னகை கொள்ளை கொள்ளும் அழகு. அழைத்துப் பேசும் போதும், இடையிடையே கலகலவென சிரித்து சுவாரஸ்யமாக்குவார் உரையாடலை .
கவிதையும் அப்படியே...வலிகள் சொற்களாகியுள்ளது.....அவரின் மென்மயான புன்னகை கவித்துவம் ஆகியுள்ளது.
முழுக்க முழுக்க வலிகளா என்று தோன்றினாலும்...நெருப்பில் நின்றவன் ...நெருப்புச் சுட்ட வலிகளைத் தானே சொல்லுவான் என சமாதானம் கொள்கிறது மனது .
அந்த வகையில் ஆகச் சிறந்த படைப்பாக வெளியாகி உள்ளது நாடிலி.....
அட்டை படமே சொல்லும் உள்ளடக்கத்தை ...அருமையாக வடிமைத்த ஜெய ஸ்ரீ கிராபிக்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
கவிஞனின் ரசனை அறிந்து மிக அழகாக, நேர்த்தியாக வடிமைத்து ...வாம்ம்மா மின்னல் கணக்கா...மிக விரைவாய் வெளியிட்ட கடற்காகம் பதிப்பகத்தாருக்கு நன்றியும் வாழ்த்தும்..
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
இழந்து போன
எனது ஊரையும் தெருவையும்
நினைவுகளில் இயக்கிப் பார்ப்பேன்
முன்பெல்லாம்
நினைவுகளில் அவை அப்படியே தான் இருக்கிறன்றன
எவ்வித மாற்றங்களும் இன்றி
இப்போது
விஞ்ஞானப் புரட்சிகள்
அனைத்தையும் அம்மணமாக்கி விடுகிறன்றன
கடவுச் சீட்டு எடுக்க முடியாத தேசத்தின்
முகாமிலிருந்து
கைப்பேசியின்
கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் காணுகின்றேன்
நான்
நடந்து திரிந்த குச் ச்சொழுங்கையில்
சிறுவர்களின் பாதச் சுவடுகளை
நசுக்கிச் செல்லும் சப்பாத்துக் கால்களை ...
இப்படி ...நூல் முழுக்க அவரின் கனவு தேச ஏக்கங்களை நமக்கு கடத்தி கண்ணீர் வரவைக்கிறார்
உடனே வாங்கி கண்ணீரை பரிசாக பெறுங்கள்....
சிறந்த கவிஞரான இவர்...சம கால இலங்கை எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி....குணா கவியழகன் போன்றவர்களின் வரிசையில் இடம் பெறுவார் விரைவில் ..
நாம் பேசியது போல சீக்கிரம் ஒரு நாவல் எழுதுங்க தோழர் .....காத்திருக்கிறோம் ...உங்கள் கண்ணீரை எங்கள் கரங்களால் துடைக்க ....
நூலைப் பெற : +91 97903 50714
விலை: ₹110
நன்றி ...
No comments:
Post a Comment