நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வாசித்திருக்கும் நாவல் தமிழவன் அவர்களின் ஷம்பாலா எனும் அரசியல் நாவல். துவக்கத்தில் தொடுவதற்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது ஸ்ரக்சுரலிசம் நூலை வாசிப்தற்காக நான் தோழர்கள் Jamalan Tamil , Mubeen Sadhika , Yukaanthan Yuva போன்றவர்களின் எழுத்துகளின் வாயிலாகவே உள்ளேக முடிந்திருந்தாலும் இன்னும் வாசிப்பினை தொடராமலே உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையாக இருந்தது ஷம்பாலா.
ஷம்பாலா அதிகாரத்தின் உறைவிடம். வலதுசாரியச் சித்தாந்தத்தின் புதிய கொள்கைகளும், அது தொடர்ச்சியாக பெற்றுவரும் வெற்றிகளும், அதிகாரத்திற்கு எதிரானவர்களை அதிலும் குறிப்பாக படைப்பாளர்களை பழிதீர்ப்பதில் செயல்படும் நுணுக்கங்களையும் (கெளரி லங்கேஷ் படுகொலை, வரவர ராவ் போன்றவர்கள் நினைவில் வந்து செல்வார்கள்) மூன்றாம் ஹிட்லர் எனும் நீலக்கண் அரசியல்வாதியூடாக விறுவிறுப்பான நடையில் சமகால அரசியலை அலசிச் செல்கிறது.
ஷம்பாலா ஹிட்லரின் சிறுபிராயம், வளரிளம் பருவம், காதல் தோல்வி, அரசியல் தாதாவாகுதல், திருமணத்தினை மறைத்தல் என பல்வேறு விடையங்களை நீங்கள் வாசித்தால் மட்டுமே யார் யார் என்பதை கண்டடைய முடியும்.
ஜெர்மானிய ஹிட்லரை தோற்கடித்து, வலதுசாரியச் சிந்தனையை வேரறுத்தவர் ரஷ்யாவின் ஸ்டாலின் அரசு என்பதை அமர்நாத் பாத்திரம் அழுத்தமாக சொல்வது சமகாலத்திலும் எதார்த்தமாக அமைந்துள்ளதா? அல்லது விதிப்பயனா?
//நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவேதான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்.// லாமாக்களின் இந்தப் போதனை ஒவ்வொருவரையும் அவரவரின் இயங்கியலை நிறுவுகிறது.
முழுமையான ஒரு அரசியல் நாவல். நாம் சாதாரணமானவர் இல்லை. இனி தமிழவனின் அடுத்தடுத்த நூல்களையும் வாசித்துவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.
- சுகன்யா ஞானசூரி
08/09/2021.
No comments:
Post a Comment