வெள்ளி விழா ஆண்டில்
*********
18.09.1996 மாலை 6.30 மணிக்கு வலைப்பாடு கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு 19.09.1996 காலை 8 மணிக்கு தனுஷ்கோடி கரையில் இறங்கிய எமக்கு "அகதி" என முத்திரை குத்தப்பட்டு இன்று 25வது ஆண்டில். சாதனையா? வேதனையா? என பட்டிமன்றம் மட்டும் வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இப்படியே வாழ? இந்திய தேசத்திடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கு எமக்கு குடியுரிமை தருக. இயலவில்லை எனில் வேறு தேசங்களுக்கு அனுப்புக.
அந்த அலைகள் ஏன்
இந்தப் பக்கமாய்
எம்மை ஒதுக்கின?
- சுகன்யா ஞானசூரி
19/09/2020.
உள்ளத்தில் அந்த நினைவுகள்
ReplyDeleteவெள்ளம் போல் மிதந்து வரும்
எப்படி மறப்பது?
மறக்க முடியாத நினைவுகள். ஆனாலும் சுமக்க முடியாத சுமையாக அகதி எனும் சொல்.
Delete