ஈழ எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களது ' வீதியெல்லாம் தோரணம்', ' தாகம்' நாவல்கள் மற்றும் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதை தொகுப்பு என ஒரே மூச்சாக இன்று வாசித்து முடித்தேன். மனமோ கனமாக இருக்கிறது. உறக்கம் வர மறுக்கிறது. பழைய நாட்களுக்குள் அழைத்துச் செல்லுகின்றன. மனதை உலுக்கி எடுக்கிறது. புனைவுகளற்ற எதார்த்தமான கதைகள். கிளாலிக் கடலேரியில் அன்றைக்கு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அம்மம்மாவும், அத்தையும் நினைவுகளில் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இன்றைய தலைமுறைகள் எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிட எத்தனிக்கிறது. எல்லாவற்றையும் நாம் மறந்துவிடத்தான் முடியுமா? இவற்றை மீள் வாசிப்பு செய்வதனூடாக எமது வரலாற்றின் பக்கங்களில் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் அறியமுடியும். எல்லோருடைய அரசியலுக்கும் பகடியாகிப் போகிற துயரங்களை நாம் சுமந்தலைவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். எல்லாவற்றையும் மறந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் விசர் பிடித்தாட்டும். ஒரு தசாப்தமாக மே என்பது எமக்கு துயரத்தை வரலாறாக்கிய மாதம்.
- சுகன்யா ஞானசூரி
01/05/2020.
மனதில் வலி.
ReplyDelete