Tuesday, February 27, 2018

ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள்



ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் 2015 ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ஜார்கண்ட் அரசாங்கத்தின் மருத்துவத்துறை அதிகாரி.

 தாதுப்பொருட்கள் நிரம்பிய மண்வளம் கொண்ட மண்ணின் மைந்தர்கள் வாழ்வும், அவர்களின் அவலங்களும், அதிகாரத்தின் கொடுங்கரங்கள் அந்த மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளும் அதனால் சிதைந்து போகும் சாந்தால் எனும் ஆதிவாசி மக்களின் விளிம்பு நிலையை கதைகளாகியுள்ளார்.

இந்த தொகுப்பில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாந்தால் இன மக்களின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணமாக இத்தொகுப்பு உள்ளது என்றால் மிகையல்ல. 

அசைவம் சாப்பிடுகிறார்கள் மற்றும் ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள் கதைகள் அரசின் செவுளில் அறைவதைப்போல் சொல்லியிருக்கிறார். 

பழங்குடி மக்கள் மீதான கார்ப்பரேட் அரசின் பொருளாதாரச் சுரண்டல்கள், இடப்பெயர்வுகள், வாழ்வாதாரத்துக்கான தேடல், உடலை மூலதனமாக்கும் பெண்கள், பெண்களை காப்பாற்ற இயலாத ஆண்கள் என கதைகளில் மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் மனதை கனமாக்குகின்றன. 

தமிழில் அழகாகவும் வாசிப்புத் தடங்கல் இல்லாமலும் மொழிபெயர்ப்பு செய்துள்ள லியோ ஜோசப் அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:6
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் - சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்(தமிழில்): லியோ ஜோசப்
மொத்தப் பக்கம்: 192
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ₹180

4 comments:

  1. உங்கள் அறிமுக பதிவுகளால்
    அறிமுகமாக புதிய புத்தகங்கள்
    கிடைக்கிறது நண்பரே...!!

    ReplyDelete
  2. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாந்தால் இன மக்களின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணமான இக்கதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete