Thursday, December 29, 2016

பாடும் பறவையைப்போல்....

சூரியன் எழாத காலை வேளை
மழை நனைத்த மண் சாலை
பூக்களைத் தூவும் மலர்களின் சோலை
ஒரு குவளை சூடான தேநீர்...
இலைகளில் தங்கிவிட்டிருக்கும்
பேரருவியொன்றின் எச்சங்களை
உலுப்பியுலுப்பி நீராடும்
பனங்காய்ச் சில்லு வண்டியோட்டும்
அச்சிறுவனுக்குள் சிக்குண்டு
சிந்தைக்குள் பின்னோக்கிச் செல்கின்றேன்!
விசங்களைச் சுமந்தபடிக்கு அலையும் காற்றும்
தலையொடிந்த நெடும்பனைகளும்
குருதி வீச்சமும் கூப்பாட்டுச் சத்தமும்
சிந்தை கலங்கி நிகழ்காலம் சேர்த்தது.
மலர் தூவும் வாசனையோடு
மழை நனைத்த மண்மீது
நடந்து அழைந்து தேசம் முழுமையும்
திரிய வேண்டும் பாடும் பறவையைப்போல்
சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி!

[பரணி காலாண்டிதழில் (அக்டோபர் - டிசம்பர் 2016) வெளியாகியுள்ள எனது கவிதை]


வரவிருக்கும் புத்தாண்டிலாவது பாடும் இப்பறவைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனும் நம்பிக்கையோடு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.

6 comments:

  1. வணக்கம்
    அருமையான வரிகள் இரசித்தேன்

    ReplyDelete
  2. இதழில் வெளியானமைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தில் ஆசீர்வதிக்கப்பட்டவனாகிறேன். மிக்க நன்றிகள் ஐயா.

      Delete